நாசிக் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு
நாசிக் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
நாசிக்,
நாசிக் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நாசிக் மாவட்ட சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவர்கள் பவிராஜ் கிடு(வயது40), ரவீந்திர தர்மாஜி(59), தாராபாய் சாரத்(42) ஆகியோர் ஆவர். உயிரிழந்த இவர்கள் மாவட்டத்தில் சந்த்வாட், நிபாட் மற்றும் யவோலா தாலுகாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் நாசிக் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் தொடர்ந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story