கோவில்பட்டி அருகே பரிதாபம் ரெயில் மோதி, கல்லூரி மேலாளர் பலி


கோவில்பட்டி அருகே பரிதாபம் ரெயில் மோதி, கல்லூரி மேலாளர் பலி
x
தினத்தந்தி 22 Sep 2018 9:15 PM GMT (Updated: 2018-09-22T18:00:24+05:30)

கோவில்பட்டி அருகே ரெயில் மோதி கல்லூரி மேலாளர் பரிதாபமாக இறந்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே ரெயில் மோதி கல்லூரி மேலாளர் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மேலாளர் 

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் கோவில்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை 8.30 மணியளவில் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அவர் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் கணேசனின் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரெயில் மோதி இறந்த கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கணேசனுக்கு முருகலட்சுமி (48) என்ற மனைவியும், ஹரீஷ் (21), ஸ்ரீராம் (20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். முருகலட்சுமி கயத்தாறு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Next Story