ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு


ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 7:29 PM GMT)

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிஸ்டர் சென்னை ஆணழகன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அடையாறு போக்குவரத்து போலீஸ்காரர் ஏ.புருஷோத்தமன் பங்கேற்றார்.

சென்னை,

இவர் 80 கிலோ எடை பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். சென்னையில் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னை போலீஸ்துறைக்கு பெருமை சேர்ந்த போலீஸ்காரர் புருஷோத்தமனை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு வெகுமதியும் வழங்கினார்.

ராசிபுரத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாழ்த்தினார்.

போலீஸ்காரர் புருஷோத்தமன் 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story