தைலாவரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது


தைலாவரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2018 9:49 PM GMT (Updated: 2018-09-23T03:19:34+05:30)

தைலாவரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுப்போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்கள் திருடும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி போலீசார் தைலாவரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது இருவரும் சேர்ந்து கூடுவாஞ்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன் (வயது 20), ஜாவுதீன்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.

Next Story