திருட்டுத்தனமாக மது விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது


திருட்டுத்தனமாக மது விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 3:24 AM IST (Updated: 23 Sept 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

அதையொட்டி உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மருதம் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் (வயது 38), எல்.எண்டத்தூரை சேர்ந்த ராஜசேகர் (40), முருகேசன் (42), பார்வதிபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (55), சிறுமயிலூரை சேர்ந்த உண்ணாமலை (45) ஆகியோர் திருட்டுத்தனமாக மது விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

3 பெண்கள் வேலூர் சிறையிலும், ஆண்கள் 2 பேர் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story