கடன் தருவதாக கூறி விதவை பெண் கற்பழிப்பு; 2 பேர் கைது


கடன் தருவதாக கூறி விதவை பெண் கற்பழிப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:07 AM IST (Updated: 23 Sept 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை சேர்ந்த 30 வயது விதவை பெண் ஒருவர் ராஜேஷ் என்பவரிடம் கடனாக பணம் கேட்டு இருந்தார். இதற்கு அவரும் பணம் தருவதாக உறுதி அளித்தார்.

மும்பை,

ஒருநாள் அவர் பணம் தருவதாக கூறி பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் நண்பர் பலராமுடன் சேர்ந்து பெண்ணை மிரட்டி கற்பழித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விதவை பெண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷ் மற்றும் பலராம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.



Next Story