தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெறும் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. இதனை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான வள்ளலார், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கணபதி நகர், பி.வி.செல்வராஜ் மகளிர் மேல் நிலைப்பள்ளியிலும், காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒரத்தநாடு தாலுகா நெய்வாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை அவர் ஆய்வு செய்தார்.
முன்னதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக பார்வையாளர் வள்ளலார் கலந்தாய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்கள் அடுத்தமாதம் (அக்டோபர்) 7, 14 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் என்னிடம் தெரிவிக்கலாம்
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து, தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்கள், பேருந்து பயணிகள், இளைஞர்கள், மாணவ மாணவிகளிடம் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், கும்ப கோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ், மகாலட்சுமி, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து, தாசில்தார்கள் அருணகிரி, ரமேஷ், தேர்தல் தனிதாசில்தார் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story