சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அ.தி.மு.க. - தி.மு.க. ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
சட்டம் ஒழுங்கு பிரச் சினை ஏற் படும் என்பதால் புதுக்கோட்டையில் அ.தி.மு.க.-தி.மு.க ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 18-ந் தேதி ஊழல் நிறைந்த அ.தி.மு.க அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி விலகக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் பொன்.ராமலிங்கம், திருநல்லூர் பழனியப்பன் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறாக பேசினர். இதுகுறித்து கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை டவுன் போலீசார் தி.மு.க. நிர்வாகி பொன்.ராமலிங்கத்தை கைது செய்தனர். மேலும் திருநல்லூர் பழனியப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக பேசிய தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து கடந்த 21-ந்தேதி புதுக்கோட்டை திலகர் திடலில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து, புதுக்கோட்டையில் உள்ள ஜெ.ஜெ.கல்லூரி முன்பும் மற்றும் கீழ 2-ம் வீதியல் உள்ள தி.மு.க. ரகுபதி எம்.எல்.ஏ. வீட்டின் முன்பும், மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த தங்களுக்கு உரிய பாதுகாப்பும் மற்றும் அனுமதியும் வழங்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் 2 பெரிய கட்சிகளுக்கு இடையே கருத்து வேற்றுமை நிலவி வருவதையடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது. ஜெ.ஜெ. கல்லூரி முன்பு உள்ள இடம் போராட்டத்திற்கு அனுமதிக்கப்படாத இடமாகும். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் நேற்று நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் நேற்று அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் புதுக்கோட்டையில் உள்ள ரகுபதி எம்.எல்.ஏ. வீடு, ஜெ.ஜெ.கல்லூரி, மாவட்ட தி.மு.க. அலுவலகம், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல புதுக்கோட்டை திலகர் திடலில் கடந்த 18-ந்தேதி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய, நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டும், விராலிமலையில் உள்ள திருநல்லூர் பழனியப்பனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், அரிமளம் ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தையும் அடித்து நொறுக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், விராலிமலை சட்டமன்ற அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க.சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றால், விராலிமலையில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து நேற்று நடைபெற இருந்த தி.மு.க. ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், திருநல்லூர் பழனியப்பனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் நேற்று விராலிமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story