நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 10-ந்தேதி கடைசி நாளாகும்.
நாகப்பட்டினம்,
விளையாட்டு வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 விளையாட்டு வீரர்களுக்கும், 2 வீராங்கனைகளுக்கும், 2 பயிற்சியாளர்களுக்கும், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது மற்றும் தலா ரூ.1 லட்சம், தங்க பதக்கம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெற நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 10-ந்தேதி கடைசி நாள்
விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story