பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி


பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2018 4:15 AM IST (Updated: 25 Sept 2018 8:55 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.

புதுச்சேரி,

மத்திய அரசின் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தூய்மை பணி நடைபெற்ற வருகிறது. காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணாநகரில் நேற்று காலை தூய்மை பணி நடந்தது. பணிகளை சபாநாயகர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வட்டார காங்கிரஸ் செயலாளர் வினோத், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், புதர்கள் அகற்றப்பட்டன. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கழிவுநீர் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியின்போது சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்தேன். எனவே சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். அவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது. தேவைப்பட்டால் அவர்கள் 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான கால நீட்டிப்பு பெறலாம். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகளை பெறவும் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம். கோர்ட்டு என்ன தீர்ப்பு அளிக்கிறதோ அதன் அடிப்படையில் சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story