கவரிங் நகைக்கு கடன் வழங்கியதாக வங்கி மேலாளர் மீது வழக்கு
ஒட்டன்சத்திரத்தில், கவரிங் நகைக்கு கடன் வழங்கியதாக எழுந்த புகாரில் வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதின்காலனியை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்படுகிறது. அந்த வங்கியில் கடந்த 13.6.2018 அன்று நகைகள் ஏலமிடப் பட்டன. அதில் ஒரு பாக் கெட்டில் கவரிங் நகை இருந் தது. அதை கவனிக்காமல் ஒரு வர் ஏலம் எடுத்து விட்டார்.
இதுகுறித்து மேலாளர் செங்கதிர்செல்வனிடம் அவர் முறையிட்டார். இதையடுத்து அந்த நபர் செலுத்திய தொகை முழுவதும் திருப்பி கொடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தை மேலாளர் தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக் காமல் மறைத்து விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த நானும், பொதுமக்களும் பொதுமேலாளரை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், வங்கி மேலாளர் செங்கதிர் செல்வன், கவரிங் நகையை தானே கண்டுபிடித்தது போன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் புகார் கொடுத் தார்.
மேலும் கவரிங் நகையை வைத்து கடன் பெற்றவர் களுக்கு, சிறு-குறு தொழில் கடன், முத்ரா கடன் ஆகியவை மேலாளரால் கொடுக்கப் பட்டுள்ளது. அதேபோல் நகைகளை ஏலம் விடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபருக்கு சாதாரண தபாலும், பின்னர் பதிவு தபால் மூலமும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னர் நாளிதழ்களில் விளம்பரம் செய்து, மறுபடியும் சம்பந்தப்பட்ட நபருக்கு பதிவுதபால் அனுப்ப வேண் டும்.
இதையடுத்து வங்கியில் பகிரங்கமாக ஏலம் விட வேண்டும். இந்த விதியை பின்பற்றாமல், போலி ஆவணம் தயார் செய்து ஏலம் விட்டது போன்று நகைகள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆவணங்களை சரிபார்த்து விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நகையை திரும்ப கொடுக்க வேண்டும். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் வங்கி மேலாளர் செங்கதிர்செல்வன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ரைகானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story