போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி: பெருங்களூர் சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி செய்த பெருங்களூர் சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் மனவிடுதியை சேர்ந்தவர் வெள்ளமகன் (வயது 63). இவருக்கு சொந்தமான 87 சென்ட் நிலம் மனவிடுதியில் உள்ளது. இந்நிலையில் மனவிடுதியை சேர்ந்த பழனிவேலு என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து வெள்ளமகனுக்கு சொந்தமான 87 சென்ட் நிலத்தை குமாரசாமி என்பவர் பெயருக்கு மாற்றி பெருங்களூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளமகன், தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக பழனிவேலு, குமாரசாமி, பெருங்களூர் சார் பதிவாளர், மாமூண்டி, கருப்பையா, எட்வர்டு ஆகிய 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story