மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது நண்பருடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம்
திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தனது நண்பருடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி மடப்புரத்தை சேர்ந்தவர் ஜான்சேவியர். இவருடைய மகன் ஜான் கிலேனர்(வயது 29). இவர் இனிப்பு கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜெனிபர் என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெர்சா ஏஞ்சல்(5), ஜெர்லி ஏஞ்சல்(3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டுப்பட்ட காயங்களுடன் ஆரோக்கிய ஜெனிபர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. வீட்டிலேயே ஆரோக்கிய ஜெனிபர் இறந்து கிடப்பதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த ஆரோக்கிய ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆரோக்கிய ஜெனிபரை அவரது கணவர் ஜான் கிலேனர் அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ஜான் கிலேனரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜான் கிலேனர் போலீசாரிடம், தன் மனைவி தனது நண்பருடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் அரிவாளால் வெட்டியும், உயிர் போகாததால் சுடிதார் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததாக பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும்(ஜான் கிலேனர்), எனது நண்பர் தலைக்காட்டை சேர்ந்த தமிழழகனும் நேற்று முன்தினம் இரவு வேதாரண்யத்தில் பேக்கரி தயாரிக்கும் அடுப்பு கட்டும் பணிக்காக சென்று இருந்தோம். அங்கு மது அருந்தி விட்டு இரவு 1 மணியளவில் எனது வீட்டிற்கு வந்தோம். என்னோடு எனது வீட்டிலேயே தமிழழகன் இரவு தங்கி விட்டான். குடிபோதையில் இருந்ததால் நான் அயர்ந்து தூங்கி விட்டேன்.
சிறிது நேரத்தில் நான் கண் விழித்து பார்த்தபோது என் மனைவியையும், எனது நண்பரையும் காணவில்லை. நான் இருவரையும் தேடிச்சென்றேன். அப்போது வீட்டின் பின்புறம் சென்றபோது இருவரும் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடனடியாக இருவரையயும் கொலை செய்ய எண்ணி அருகில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் வெட்டினேன். அதில் வெட்டுப்படாமல் தமிழழகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். என் மனைவியின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதியில் அரிவாளால் வெட்டினேன். இதில் படுகாயம் அடைந்த என் மனைவியை பார்த்து என் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
உடனடியாக நானே அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். ஆனால் என் கோபம் அடங்காததால், நமக்கு துரோகம் செய்த மனைவி இனிமேல் உயிரோடு இருக்கக்கூடாது என முடிவு செய்தேன்.
பின்னர் எனது மனைவி யிடம் பணம் தயார் செய்து கொண்டு வேறு மருத்துவ மனைக்கு செல்லலாம் என நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து வந்தேன். நள்ளிரவில் துப்பட்டா மூலம் எனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். போலீ சாரின் விசாரணைக்கு பயந்து என் மனைவியே தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் என்னை துருவி, துருவி விசாரித்ததில் நான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நண்பருடன் உல்லாசமாக இருந்த மனைவியை தொழிலாளி கொலை செய்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story