வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறி கொள்ளை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர், 


விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையைச்சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. சம்பவத்தன்று இவர் தனது வயலில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரை விருத்தாசலம் டவுனைச்சேர்ந்த ராஜ்குமார்(22) என்பவர் வழிமறித்து தாக்கி 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி வெங்கடாஜலபதி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வாக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். பின்னர் ராஜ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே ஒரு வழிப்பறி கொள்ளை வழக்கு உள்ளது. எனவே அவரது குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார்(பொறுப்பு) பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று ராஜ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள ராஜ்குமாரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. 

Next Story