கோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய பட்டப்படிப்பு தொடங்க அனுமதி
கோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய பட்டப்படிப்பு தொடங்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்தார்.
கோவை,
கோவை அரசு மருத்துவ கல்லூரியில் 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங், செவிலியர் உதவியாளர், டிப்ளமோ ரேடியாலஜி, லேப் டெக்னீசியன் உள்பட 8 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரியில் 4 ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் படிப்பு இதுவரை இல்லாத நிலை இருந்தது.
இதனால் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ-மாணவிகள் கோரிக் கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பி.எஸ்சி. ரேடியாலஜி இமேஜிங், டயாலிசிஸ் ஆகிய புதிய படிப்புகள் தொடங்க கல்லூரி நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்பேரில் அரசு மருத்துவ கல்லூரியில் பி.எஸ்சி. ரேடியாலஜி இமேஜிங் படிப்பை அறிமுகப்படுத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வரும், கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுமான அசோகன் கூறியதாவது:-
கோவை மருத்துவ கல்லூரியில் 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. 4 ஆண்டுக்கான பட்டப்படிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தோம். அதை ஏற்று புதிதாக பி.எஸ்சி. 4 ஆண்டுக்கான ரேடியாலஜி இமேஜிங் பட்டப்படிப்பு நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டப்படிப்பில் மொத்தம் 10 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப் பங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினியோகம் செய்யப்பட்டது. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இதில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு உதவியாளர் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெறு கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story