கடலில் மிதந்து வந்த 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் கைப்பற்றி விசாரணை
வேதாரண்யம் பகுதியில் கடலில் 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மிதந்து வந்தன. இவற்றை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய கடற்கரை பகுதிகளில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து தங்கம் போன்ற பொருட்கள் படகு மூலம் தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தலை தடுப்பதற்காக கோடியக்கரை, தோப்புத்துறையில் உள்ள சுங்க இலாகா அலுவலகங்கள், கோடியக்கரையில் விமானப்படை முகாம் அமைத்து ரேடார் வைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் கடலோர காவல் குழும போலீசார் படகு மூலம் கடல் பகுதிகளிலும், தரை மார்க்கமாக வாகனங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீப காலமாக வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் தொழில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கடத்தலில் ஈடுபட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு பகுதியில் கடலில் கஞ்சா பொட்டலங்கள் மிதந்து வருவதாக மீனவர்கள், கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் கடலோர காவல் குழும போலீஸ் துணை கண்காணிப்பாளர் கலிதீர்்த்தான், இன்ஸ்பெக்டர் மும்தாஜ் பேகம் மற்றும் போலீசார் மணியன்தீவு கடல் பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு கடலில் மிதந்து வந்த ஆறு பொட்டங்களை கைப்பற்றி பிரித்துப் பார்த்தில் அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த எடை 12 கிலோவாகும்.
இது குறித்து கடலோர காவல்குழும போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விட்டதா? அல்லது அதிகம் பாரம் காரணமாக படகில் சென்றவர்கள் இந்த கஞ்சா பொட்டலங்களை தூக்கி எறிந்துள்ளனரா? அல்லது இந்திய கப்பற்படை ரோந்து வருவதை பார்த்தவுடன் கடத்தல்காரர்கள், கஞ்சா பொட்டலங்களை வீசி சென்றார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் கடலில் கஞ்சா பொட்டலங்கள் மிதந்து வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story