நாகையில், விசைப்படகு மீனவர்கள் 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


நாகையில், விசைப்படகு மீனவர்கள் 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:30 AM IST (Updated: 29 Sept 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதை கண்டித்து நாகையில், விசைப்படகு மீனவர்கள் 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என அக்கரைப்பேட்டையில் நடந்த அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை ஏற்றத்தால் மீன்பிடி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும்.

சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(அக்டோபர்) 3-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, 5-ந்தேதி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story