அரியூரில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் - 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேர் கைது
அரியூர் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அரியூரில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்காமல் மேம்பால பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தொரப்பாடியில் இருந்து அரியூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. எனவே ஸ்ரீபுரம் பொற்கோவில், ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் என பலத்தரப்பினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் அரியூர், ஸ்ரீபுரம் செல்லும் வாகனங்கள் சித்தேரி மற்றும் பென்னாத்தூரில் உள்ள மாற்றுப்பாதை வழியாக சென்று வருகின்றன. சித்தேரி ரெயில்வே மேம்பால தரைச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படுகிறது. இரவு நேரத்தில் அந்த ரெயில்வே மேம்பால பகுதியில் மின்விளக்குகள் ஏதும் பொருத்தாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதுடன், சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
சித்தேரி ரெயில்வே மேம்பாலம் மற்றும் சித்தேரியில் இருந்து அரியூர் சேம்பர் செல்லும் சாலையும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதை பயன்படுத்தி சில சமயங்களில் வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தேரியில் இருந்து அரியூர் சேம்பர் செல்லும் சாலையில் ஒரு பெண்ணிடம் வழிப்பறி சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேலூர் கஸ்பா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கஸ்பா ரெயில்வே மேம்பாலம் பணியும் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இதனை கண்டித்து அரியூர் ரெயில்வே கேட் அருகே நேற்று மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநகர அவைத்தலைவர் விஜயசங்கர், 7-ம் பகுதி செயலாளர் அய்யப்பன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம்- காட்பாடி பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரெயில்வே உதவி நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், ரெயில்வே போலீசார் மற்றும் அரியூர் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டகாரர்கள் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை மாற்று வழியாக செல்ல தற்காலிக சாலையும் அமைக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்த உதவி நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், சித்தேரியில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் செல்லும் சாலையில் ஜல்லிகள் நிரப்பப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது. அரியூர் ரெயில்வே மேம்பால பணிக்கான ஸ்டீல் கர்டர்கள் திருச்சியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவரவேண்டும். கஸ்பா ரெயில்வே மேம்பால பணியை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே அரியூர் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார்(அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்) உள்பட 200 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story