சென்னை விமான நிலையத்தில் ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது
மலேசியா மற்றும் ஓமன் நாடுகளில் இருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தங்கையா (வயது 53) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.
பின்னர் அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரது சூட்கேசில் விளையாட்டு கார் மற்றும் பால்பாயிண்ட் பேனாக்களில் பயன்படுத்தும் ரீபிள்கள் அதிகளவில் இருந்தன.
அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் விளையாட்டு காருக்கு உள்ளேயும், பேனா ரீபிள்களுக்கு உள்ளேயும் தங்க கம்பிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இதேபோல் ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிவராஜ் (32) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.
அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 650 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
தங்கையா, சிவராஜ் ஆகிய 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 850 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை யாருக்காக அவர்கள் சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story