அனைத்து கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது - மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
அனைத்து கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கூறினார்.
ஆரணி,
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தி தலைமையில் தொடுதிரை மேடை (டிஜிட்டல் நீதிமன்றம்) தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.தேவநாதன், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.இந்திராகாந்தி, நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி சார்பு நீதிபதி எஸ்.எழில்வேலவன் வரவேற்றார்.
தொடுதிரை மேடையை மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகம் முழுவதும் 25 கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய கட்டுப்பாட்டு அறையை அவர் திறந்து வைத்து, கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கண்காணிப்பு கேமராக்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தங்களை நீதிமன்றம் முழுமையாக கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். நேர்மையான, லஞ்சம், ஊழலற்ற நீதிமன்றமாக அமைய இதுபோன்ற டிஜிட்டல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொடர்ந்து 5 ஆண்டுகள் பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-
கேள்வி:- சிவகங்கை மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி இருக்கையில் கைதி அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதே?
பதில்:- இதுபோன்று இனி வராமல் இருப்பதற்காகத்தான் அனைத்து கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
கேள்வி - பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நீதித்துறையை விமர்ச்சித்ததை குறித்து?
பதில் - இந்திய நீதித்துறை வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக ஆரணி - வாழப்பந்தல் சாலையில் உள்ள போதிமரம் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு அங்குள்ள முதியோர்களுக்கு நீதிபதி க.மகிழேந்தி பழங்கள், பிஸ்கெட் போன்றவைகளை வழங்கி முதியோர்களிடம் நலம் விசாரித்தார்.
நிகழ்ச்சிகளில் முதியோர் இல்ல நிர்வாகி ராஜராஜேஸ்வரி, அரசு வக்கீல் வி.வெங்கடேசன், வக்கீல் சங்கத்தலைவர் எ.தஸ்தகீர், சங்க முன்னாள் தலைவர்கள் எஸ்.தனஞ்செயன், எ.சிகாமணி, வக்கீல்கள் பார்த்தீபன், கே.ஆர்.ராஜன், வக்கீல் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, ரஷீத் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Tags :
Next Story