திருவாரூர் மாவட்டத்தில் விடிய,விடிய கனமழை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திருவாரூர்,
லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய கனமழை விடிய, விடிய இடைவிடாது கொட்டி தீர்த்தது. மழையினால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்குள்ளாயினர். கன மழை இடைவிடாது பெய்ததால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story