கரூர் அருகே வெவ்வேறு இடங்களில் விபத்து: பேராசிரியர்கள் உள்பட 4 பேர் பலி
கரூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பேராசிரியர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
அரவக்குறிச்சி,
மதுரை ஜான்ஸ்புரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருணோதயம் எஸ்கின் (வயது 52), பசுபதி விஸ்தரிப்பு பி.என்.டி.காலனியை சேர்ந்தவர் செல்வம்(45), விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகன் ஜெயபிரகாஷ்(24), விருதுநகரை சேர்ந்தவர் ஜோசப்ராஜ்(40). இவர்கள் 4 பேரும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
நாமக்கலில் நேற்று நடைபெற்ற ஒரு தொண்டு நிறுவன கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 4 பேரும் ஒரு காரில் மதுரையில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை அருணோதயம் எஸ்கின் ஓட்டினார். நேற்றுகாலை கார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூர் பகுதியில் மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் அருணோதயம் எஸ்கின், ஜோசப்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயமடைந்த செல்வம், ஜெயபிரகாசை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான அருணோதயம் எஸ்கின், ஜோசப்ராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கண்டியானூர், கருப்பண்ணபிள்ளை தெருவை சேர்ந்தவர் முகமதுபரீத்திக் (37). இவர் தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த முகமதுபரீத்திக், நேற்று காலை கல்லூரிக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, அதே கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் பரமத்திவேலூர் கைக்கோளார் தெருவை சேர்ந்த சார்லஸ் மனைவி விநாயகி (34) கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். விநாயகியை பார்த்ததும் முகமதுபரீத்திக் அவரை காரில் ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு அழைத்து சென்றார்.
சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணபரப்பு செல்லும் பிரிவை தாண்டி சென்றபோது, கார் நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி, எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த முகமதுபரீத்திக், விநாயகி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியினர் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு விபத்துகளும் நடைபெறும் போது மழை பெய்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story