திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
திருப்பூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் பாஸ்கரன் கூறும்போது, அரசு ஊழியர் சங்கத்தில் 2 ஆயிரத்து 380-க்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றார்கள். மாவட்டத்தில் அரசு ஊழியர்களில் 4-ல் ஒரு பங்கு ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் என்றார். இதுபோல் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் 8 ஆயிரத்து 320 ஆசிரியர்களில் 70 சதவீதம் ஆசிரியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். அலுவலக பணியாளர்கள் 560 பேரில் சுமார் 300 பேர் வரை விடுப்பு எடுத்துள்ளனர் என்றனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன. எந்தவித பாதிப்பும் இல்லை. அதே போல அலுவலக பணியாளர்களில் 10 பேர் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளனர் என்றார்.
முன்னதாக நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாநகர தலைவர் மகேந்திரபூபதி, அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், தமிழ்நாடு கணினி ஆசிரியர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஜான் கிறிஸ்துராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஞானதம்பி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
முடிவில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்படி திருப்பூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு கல்லூரி பேராசிரியர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், வருவாய்த்துறையினர், வணிகவரித்துறை ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், பொது சுகாதார துறையினர், சத்துணவு ஊழியர்கள், ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் ஒரு சில பள்ளிகளில் மாணவிகள் மற்ற மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் பாஸ்கரன் கூறும்போது, அரசு ஊழியர் சங்கத்தில் 2 ஆயிரத்து 380-க்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றார்கள். மாவட்டத்தில் அரசு ஊழியர்களில் 4-ல் ஒரு பங்கு ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் என்றார். இதுபோல் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் 8 ஆயிரத்து 320 ஆசிரியர்களில் 70 சதவீதம் ஆசிரியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். அலுவலக பணியாளர்கள் 560 பேரில் சுமார் 300 பேர் வரை விடுப்பு எடுத்துள்ளனர் என்றனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன. எந்தவித பாதிப்பும் இல்லை. அதே போல அலுவலக பணியாளர்களில் 10 பேர் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளனர் என்றார்.
முன்னதாக நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாநகர தலைவர் மகேந்திரபூபதி, அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், தமிழ்நாடு கணினி ஆசிரியர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஜான் கிறிஸ்துராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஞானதம்பி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
முடிவில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story