நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற முறையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற முறையில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்,
தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 100 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வெள்ள நேரத்தில் நீர்நிலைகளின் கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அவசர கட்டுப்பாட்டு அறையினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் 0416-2258016 என்ற எண் மூலமாகவும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மிகபலத்த மழை எச்சரிக்கையின் காரணமாக காவல்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 2,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் தொடர்பாக அவசர உதவிக்கு 9092700100 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story