ரூ.1 கோடி மோசடி : மராத்தி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது
ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டதாக டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராகுல் இஸ்வார் கபூரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
இந்தநிலையில் போலீசார் மோசடியில் ஈடுபட்டதாக டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராகுல் இஸ்வார் கபூரை அதிரடியாக கைது செய்தனர்.
மராத்தி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராகுல் இஸ்வார் கபூர். இவர் தொழிலில் முதலீடு செய்தால் பங்கு லாபம் மட்டுமே 25 சதவீதம் கிடைக்கும் என உறுதி அளித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் தாராசிங் நாக்பாலிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து தாராசிங் நாக்பால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் மோசடியில் ஈடுபட்டதாக டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராகுல் இஸ்வார் கபூரை அதிரடியாக கைது செய்தனர்.
Related Tags :
Next Story