உண்ணாவிரதம் இருந்த சர்க்கரை ஆலை ஊழியர் மயங்கி விழுந்தார் திருமண்டங்குடியில் பரபரப்பு
திருமண்டங்குடியில் உண்ணாவிரதம் இருந்த சர்க்கரை ஆலை ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரியும் ஆலை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இரவு, பகலாக நீடித்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.
நேற்று உண்ணாவிரத போராட்டத்தின்போது ஊழியர்கள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த சர்க்கரை ஆலை ஊழியர் சத்தியமூர்த்தி என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த போராட்டத்துக்கு ஆதரவாக பா.ம.க. மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதில் ஊழியர்கள் சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி சர்க்கரை ஆலை முன்பு கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story