கடலூர்: பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
கடலூர் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர்,
கடலூர் பஸ் நிலையத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் நேற்று காலையில் திடீரென வந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரை கலெக்டர் பார்வையிட்டு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் வகை கொசு உள்ளதா? என ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராமசாமிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், பஸ் நிலையம், பூக்கடை பகுதியில் உபயோகமற்ற டயர்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜகிருபாகரன், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) கீதா, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராமசாமி, செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், தாசில்தார் சத்தியன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story