தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 ஆயிரம் பேர் விண்ணப்பம் கலெக்டர் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
தஞ்சாவூர்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 287 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று நடைபெற்றது. தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய வந்த பொது மக்களிடம் உரிய விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.
பின்னர் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு புதிதாக வரப்பெற்ற வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் திருவிடைமருதூர் வட்டம், கொத்தங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்த பின், கொத்தங்குடி ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் பெண்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத பெண்களுக்கு வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தினை வழங்கினார்.
பின்னர், அம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கா.மல்லபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆண்டலாம்பேட்டை ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர் களிடம் கூறியதாவது:-
கடந்த 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்ற போது பொது மக்களிடமிருந்து 26 ஆயிரத்து 742 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 18,550 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நகல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பொது மக்கள் அதனை பார்வையிட்டு தங்கள் பெயர் பிழையேதுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார்கள் அருணகிரி (தஞ்சை), ராஜேஸ்வரி (திருவிடைமருதூர்) மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Related Tags :
Next Story