வேலூர் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் படுகாயம்
வேலூர் அருகே நடந்த கார்-லாரி மோதல் விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர்,
மராட்டிய மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று உளுந்தம் பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேலூர் மாவட்டம் வழியாக விருதுநகர் நோக்கி சென்றது. லாரியை திருச்சி காசாம்பாளையத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பவர் ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு லாரி வேலூரை அடுத்த கணியம்பாடி கணவாய்மேடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற கார் திடீரென லாரி மீது மோதியது.
இதில், காரில் பயணம் செய்த திருவண்ணாமலையை சேர்ந்த மன்னம்மாள் (55), செல்வி (35), கிருஷ்ணன் (32), வீரம்மாள் (22), அனிதா (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் தமிழரசன் வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story