சேலம் மாநகராட்சியில் 13 இடங்களில் நிவாரண முகாம் - ஆணையாளர் தகவல்


சேலம் மாநகராட்சியில் 13 இடங்களில் நிவாரண முகாம் - ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:46 AM IST (Updated: 8 Oct 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகராட்சியில் 13 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் மழை சேதத்தை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் ஏரி, ஓடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழையின்போது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 13 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் மண்டலத்தில் 20-வது வார்டு நீலாம்பாள் பள்ளி வளாகம், 22-வது வார்டு சிவதாபுரம் அரசு பள்ளி, 24-வது வார்டு மெய்யனூர் வித்யா மந்திர் பள்ளி, 27-வது வார்டு அரிசிபாளையம் மாநகராட்சி பள்ளி, 17-வது வார்டு சொர்ணபுரியில் உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் 4-வது வார்டு கூட்டுறவு திருமண மண்டபம், 7-வது வார்டு கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரி, 12-வது வார்டு மணக்காடு    காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், அம்மாபேட்டை மண்டலத்தில் 41-வது வார்டு பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 49-வது வார்டு அன்னதானப்பட்டி அகரமஹால் திருமண மண்டபம், 50-வது வார்டு நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 58-வது வார்டு    ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபம், 60-வது வார்டு தேவா திருமண மண்டபம் ஆகிய 13 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர், கழிவறை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பருவ மழையின்போது மேற்கொள்ளப்படும் அவசர கால பணிகளுக்காக மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால கட்டணமில்லா தொலைபேசி 188004256077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல், சூரமங்கலம் மண்டலம்-18004256011, அஸ்தம்பட்டி மண்டலம்-18004256022, அம்மாபேட்டை மண்டலம்-18004256033, கொண்டலாம்பட்டி மண்டலம்-18004256044 என்ற அவசர கால எண்களிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

இதுதவிர அவசர காலங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக 99435-16516 என்ற வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மழையினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், வார்டு எண், தெரு பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப் எண்ணுக்கு எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


Next Story