பெரம்பலூரில் குறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 185 மனுக்களை கலெக்டர் பெற்றார்
பெரம்பலூர் மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 185 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 185 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், ஆலத்தூர் தாலுகா தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இறந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பெரியசாமியின் குடும்பத்தினரிடம் கலெக்டர் சாந்தா வழங்கினார்.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், சுற்றுலா துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் 2 தளங்களை கொண்ட கட்டிடம் ஆகும். தரைத்தளம், முதல் தளம், 2-ம் தளம் ஆகியவற்றில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மதிய வேளையில் அமர்ந்து உணவு உண்பதற்காக கலெக்டர் அலுவலகம் தரைத்தளத்தில் தனியாக சாப்பிடும் அறை (டைனிங் ஹால்) கட்டப்பட்டது.
அந்த அறையில் அமர்ந்து அதிகாரிகள், ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக, சாப்பிடும் அறை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் மதிய உணவை தங்களது இருக்கைகளுக்கு அருகிலேயே வைத்து சிரமத்துடன்தான் சாப்பிட்டு வருகின்றனர். அந்த அறை பராமரிக்கப்படாததால் பழுதடைந்து வருகிறது. எனவே, சாப்பிடும் அறையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story