விளவங்கோடு தொகுதி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் - விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
விளவங்கோடு தொகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதரணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2012-ம் ஆண்டு எனது முயற்சியால் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய சொந்த கட்டிடம் கட்டி அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உண்ணாமலைகடை பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டிடம் கட்ட 20 சென்ட் புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். களியக்காவிளை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காற்றோட்டம் இல்லாத இடத்தில் இயங்கி வரும் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை படந்தாலுமூடு சந்தை அருகே கட்டிடம் கட்ட அரசு முன்வர வேண்டும்.
பளுகல் பேரூராட்சியில் பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடம் கட்ட கண்ணுமாமூடு-பளுகல் இடையே 20 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. குழித்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அட்டக்குளம் சாலை பகுதியில் குப்பை கொட்டும் இடமாக உள்ள காலிமனையில் கட்டிடம் கட்ட அரசு முன்வர வேண்டும். நோயாளிகள் சிரமமின்றி சிறந்த சிகிச்சை பெற சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு நிலத்தை கையகப்படுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story