சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி


சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 10 Oct 2018 4:30 AM IST (Updated: 10 Oct 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

பொள்ளாச்சி,

சூளேஸ்வரன்பட்டி காந்திபுரம் பகுதி பொதுமக்கள் நேற்று பொள்ளாச்சி மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் செந்தில்வேல் முருகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

காந்திபுரம் பகுதியில் மட்டும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதே நேரத்தில் காந்திபுரத்தின் ஒரு பகுதி, செம்பாகவுண்டர் காலனி உள்பட இதர பகுதிகளில் மின்தடை ஏற்படுவதில்லை. மின் தடையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் படிக்க முடியவில்லை. மேலும் குடிசை தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு உணவு தயார் செய்ய முடியாமல் பெண்கள் சிரமப்படுகிறார்கள்.

மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் கொசு தொல்லை தூங்க முடியாமல் விடிய, விடிய அவதிப்படுகிறோம். திருட்டு பயம் உள்ளதால் பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மின்தடை ஏற்படுவதை தடுக்க, எங்கள் பகுதியில் உள்ள மின் இணைப்புகளை, தங்கம் தியேட்டர் அருகில் உள்ள மின்மாற்றிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் 24 மணி நேரமும் மின்வினியோகம் செய்யப்படும் வகையில் தான் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்களுக்கு செல்லும் ஓயரில் இணைப்பு கொடுக்கவில்லை. மழை, காற்று காரணமாக அந்த பகுதியில் ஒயர்கள் அறுந்து விழுந்தன. தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் வேறு மின்மாற்றிக்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும், என்றனர்.


Next Story