கேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அழகியமண்டபம்,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இனயம் கடற்கரையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் இனயம் ராமன்துறை கடற்கரைபகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரையில் ஒரு இடத்தில் மூடைகள் தார்பாயால் மூடி வைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். உடனே தார்பாயை விலக்கி மூடையை சோதனை செய்தனர்.
சோதனையில், சிறு– சிறு சாக்குமூடைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கிவைத்தது யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story