தஞ்சையில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து அமைப்புகள் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு சரணகோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாநில இணைச் செயலாளர் சிவராஜ்குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், மாநகர தலைவர் பால்ராஜ், பா.ஜனதா மாவட்ட அமைப்பு செயலாளர் குணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இளங்கோ, பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், ரெங்கராஜன், கண்ணன், ஜெயபால் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரி‌ஷத், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, தமிழ்நாடு தெய்வீக புரட்சி பாசறை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story