ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:00 AM IST (Updated: 11 Oct 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெபராஜ் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலளார் பஞ்சாபிகேஷசன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குனரை மாற்ற வேண்டும். மகளிர் திட்ட அலகில் இருந்த உதவி திட்ட அலுவலர் பணியிடத்தை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்களை கொண்டு நிரப்பவும், வட்டார மேலாளர் பணியிடங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story