தொண்டி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ ஆமை


தொண்டி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ ஆமை
x
தினத்தந்தி 11 Oct 2018 4:15 AM IST (Updated: 11 Oct 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அபூர்வ ஆமை சிக்கியது.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் சில மீனவர்கள் நேற்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த மீனவர்களின் வலையில் அபூர்வ வகை கடல் ஆமையான அழுங்காமை ஒன்று சிக்கியுள்ளது.

 இதனைக்கண்ட மீனவர்கள் உடனடியாக இதுபற்றி தொண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வனச்சரகர் சதீஷ் உத்தரவின் பேரில் தொண்டி வனவர் சுதாகர், வன காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ், ராஜேசுவரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமையை பாதுகாப்பாக மீட்டனர். அதன் பின்னர் வனத்துறையினர் அந்த ஆமையை ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்று மீண்டும் கடலில் விட்டனர்.


Next Story