மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல் + "||" + Paddy farmers stroll through the paddy procurement paddy near Odathadana

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குறைவான அளவு நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.


இதன் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் தேங்கி கிடக்கிறது. மழையில் இந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யக்கோரி அப்பகுதி விவசாயிகள் நேற்று மதியம் கருக்காடிப்பட்டி பாலம் அருகே வெட்டிக்காடு-தஞ்சை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முத்துஉத்திராபதி தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2. மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்
கறம்பக்குடி அருகே குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
4. முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியல்
முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. அம்பேத்கர் பதாகை சேதம்: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
அம்பேத்கர் பதா கையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.