தஞ்சையில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமை டி.ஆர்.பாலு பார்வையிட்டார்
தஞ்சையில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமை தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பார்வையிட்டார்.
தஞ்சாவூர்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி 4-வது கட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், பிழைதிருத்தம் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் 4-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி தி.மு.க. கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என்று எல்லோரும் இந்த சிறப்பு முகாமில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் தி.மு.க.வினரை முழுமையாக முடுக்கி விட வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்து வருகிறேன். தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்”என்றார்.
இதை தொடர்ந்து நாஞ்சிக்கோட்டை, வல்லம் ஆகிய பகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமையும் அவர் பார்வையிட்டார்.

Related Tags :
Next Story