மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்: தம்பதி உள்பட 4 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்: தம்பதி உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:15 AM IST (Updated: 15 Oct 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி கார் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் தம்பதி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

வடமதுரை, 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் இப்திகர்ரகுமான் (வயது 34). இவர், தனது மனைவி நசீமாபானுவுடன் (30) நேற்று ஒரு காரில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது புகையிலைப்பட்டியை சேர்ந்த ஜார்ஜ் ஸ்டீபன் (31), ராயப்பன் (52) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்களில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிளின் மீது மோதியதுடன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜார்ஜ்ஸ்டீபன், ராயப்பன் மற்றும் காரில் வந்த இப்திகர் ரகுமான், நசீமாபானு ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story