மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 661 மையங்களில் சிறப்பு முகாம் பார்வையாளர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் 661 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 661 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளின் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடந்தது. இதற்கிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் உரிய வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் போதுமான படிவங்களுடன் மையங்களில் இருந்து விண்ணப்பங்களை பெற உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் தகுதிவாய்ந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, செல்லப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுச்சத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், எல்காட் மேலாண்மை இயக்குனருமான விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்ததையும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா என்பதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களை இயக்குனர் விஜயகுமார் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விஜயகுமார் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் 31.10.2018 வரை நடைபெற உள்ளதால் 18 வயது உடைய அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும், என அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, சப்-கலெக்டர் கிராந்தி குமார், திருச்செங்கோடு உதவி-கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story