வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க என்னை தொடர்பு கொண்டால் ‘இந்தி நடிகர்களை பார்க்க ஏற்பாடு செய்கிறேன்’ பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சு
‘‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க என்னை தொடர்பு கொண்டால், இந்தி நடிகர்களை பார்க்க ஏற்பாடு செய்வேன்’’ என பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறியுள்ளார்.
மும்பை,
‘‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க என்னை தொடர்பு கொண்டால், இந்தி நடிகர்களை பார்க்க ஏற்பாடு செய்வேன்’’ என பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கூறியுள்ளார்.
திருப்பதிக்கு அழைத்து செல்வேன்
மும்பை காட்கோபர் பகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராம் கதம். இவர் சமீபத்தில், இளைஞர்களிடம் நீங்கள் காதலிக்கும் பெண்களை உங்களுக்காக தூக்கி வருவேன் என கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் ராம் கதம் டுவிட்டரில் பிரதமர் மோடியை ‘டேக்' செய்து பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
18 வயது நிரம்பிய என் நண்பர்கள் யாருக்காவது சினிமா படப்பிடிப்பு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.
நீங்கள் இந்தி திரைப்பட நட்சத்திரங்களை பார்க்க நான் உதவி செய்கிறேன். உங்களை திருப்பதி கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்கிறேன்.
வாக்காளர் பட்டியலில் பெயர்
நீங்கள் எல்லோரும் எனது இளம் நண்பர்கள். உங்களுக்கு நான் முக்கியத்துவம் தரவேண்டும். நீங்கள் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டி பழக ஏற்பாடு செய்து தருகிறேன். உங்களை உற்சாகப்படுத்துவதும், ஊக்கப்படுத்துவதுமே எனது நோக்கமாகும்.
வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்பவர்கள் என் அலுவலகத்தில் தகவலை தெரிவியுங்கள். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறுகிறார்.
எம்.எல்.ஏ. கிண்டல்
ராம் கதமின் இந்த வீடியோவை கிண்டல் செய்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜித்தேந்திர அவாத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யவே இவ்வளவு சலுகைகள் வழங்குகிறார் என்றால், ஓட்டுக்கு என்னவெல்லாம் கொடுப்பார் என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்'' என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story