புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்
புதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே முன்சிறையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. இதில் 108 மாணவ–மாணவிகள் பயின்று வருகிறார்கள். கடந்த 2015–ம் ஆண்டு அரசு அனுமதித்த மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக 20 மாணவ–மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சேர்த்ததாக தெரிகிறது. கூடுதலாக சேர்க்கப்பட்டவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட 20 மாணவர்கள் உள்பட 59 மாணவ–மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதையறிந்த மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று காலையில் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் கல்லூரி முன்பு கூடினர். அவர்கள் கல்லூரியின் வெளியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கல்லூரி நிர்வாகத்தினரும், புதுக்கடை போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், துணை தாசில்தார் அகிலா குமாரி, வருவாய் ஆய்வாளர் ரியாஸ் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் தொடர்ந்து கல்வி பயிலவும், அவர்கள் தேர்வு எழுதி, முடிவுகள் வெளி வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story