ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 80 பேர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணைசெயலாளர் மாசிலாமணி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடினர். தொடர்ந்து அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
அப்போது, விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவப்பிரகாசம், செந்தில் குமார், வேம்பரசி உள்பட போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி, மாவட்ட செயலாளர் சம்பந்தம் உள்பட 80 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story