30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 16 Oct 2018 4:00 AM IST (Updated: 16 Oct 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் வழங்குவது, மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்குவது, 4 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்துவது என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நாகையில் நேற்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாகை அவுரித்திடலில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் குமார், மாவட்ட இணை செயலாளர்கள் பழனி, தமிழ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகள் குறித்து ரேஷன்கடை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 400 கடைகள் மூடப்பட்டு இருந்தன.

Next Story