வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு ரூ.28 லட்சம் மோசடி கூட்டுறவு வங்கி காசாளர் கைது


வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு ரூ.28 லட்சம் மோசடி கூட்டுறவு வங்கி காசாளர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 8:45 PM GMT)

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு ரூ.28 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி காசாளர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையில் உள்ள மாநகராட்சி கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திர ஜாதவ். சமீபத்தில் பிர்பாலா ஷா என்ற பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து தொடர்ந்து பணம் எடுக்கப்பட்டு வந்தது.

இதனால் சந்தேகமடைந்த உதவி மேலாளர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த பெண் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எதுவும் எடுக்கவில்லை என உதவி மேலாளரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வங்கி காசாளர் அங்குஷ் ரகாதே(வயது43) வாடிக்கையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுபோல அவர் மேலும் பல வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.28 லட்சம் வரையில் எடுத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மோசடி குறித்து வங்கி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசாளர் அங்குஷ் ரகாதேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story