வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் கலெக்டரிடம் மாணவ, மாணவிகள் மனு
வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மாணவ, மாணவிகள் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
வேப்பனப்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் டாக்டர் பிரபாகரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில், பல்லேரிப்பள்ளி, எப்ரி, மணவாரணப்பள்ளி, நாச்சிக்குப்பம், தடத்தரை, அத்திகுண்டா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கிருஷ்ணகிரி அரசுக்கல்லூரிக்கு செல்கிறோம்.
தற்போது காலை 7.15 மணிக்கும், 8 மணிக்கும் 2 டவுன் பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு பஸ்களில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிக்கு செல்வோர், கிராம பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்கு செல்லும் அனைவரும் பயணிக்க வேண்டி இருப்பதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடியும், கூரை மீது அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். அடிக்கடி மாணவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இவற்றை தவிர்க்க 2 பஸ்களுக்கும் இடையில் 7.45 மணிக்கு கூடுதலாக ஒரு டவுன் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர், மாநில தலைவர் ஜோதிமணி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் பணி புரிந்து வரும், 21 பணியாளர்கள் ஏழாவது ஊதியக்குழுவின் பட்டியலில் விடுபட்டுள்ளனர்.
இவர்களை ஏழாவது ஊதியக்குழுவின் பட்டியலில் இணைத்து அதன்படி சம்பளம் வழங்க வேண்டும். நிலுவை தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். அரசாணை எண் 303-ன் படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், 2013-ல் பணி அமர்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணை எண் 348-ன் படி பணிக்கொடை 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

Related Tags :
Next Story