காரை அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காரை அரசு மருத்துவமனை பகல், இரவு என முன்பு செயல்பட்டது போல் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலத்தூர் கேட் அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த சில நாட் களாக பகலில் மட்டும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மருத்துவமனை செயல்படுவதில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மருத்துவமனை பகல், இரவு என முன்பு செயல்பட்டது போல் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலத்தூர் கேட் அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் சசிகலா, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், தாசில்தார் ஷாஜகான், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், டாக்டர் அருட்செல்வன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காரையில் மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story