விகாரா “கை” பேண்டு


விகாரா  “கை” பேண்டு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:21 AM IST (Updated: 17 Oct 2018 10:21 AM IST)
t-max-icont-min-icon

சைகையை கொண்டு ஸ்மார்ட் கருவிகளை கட்டுப்படுத்தும் ஆய்வுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மிகவும் எளிமையான முறையில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கின்றது விகாரா நிறுவனம்.

கை மணிக்கட்டில் அணிந்து கொள்ளும் இந்த கருவியை கொண்டு நமது டி.வி, செல்போன், ஹெட் செட், ட்ரோன் போன்ற அனைத்து உபகரணங்களையும் சைகை மூலம் இயக்கலாம். சைகையால் கட்டுப்படுத்துவதால் இதன் பெயரை ‘கை’ என்றே வைத்துள்ளனர் இந்த நிறுவனத்தினர்.

இந்த ‘கை’ கருவி நமது விரல் மொழியால் மற்ற கருவிகளுடன் தொடர்பு கொள்ள வைக்கும். கருத்தரங்குகளில் விரல்களை அசைப்பதன் மூலம் அடுத்தடுத்த ஸ்லைடுகளை சுலபமாக நகர்த்தலாம். நமது தேவைக்கேற்ப பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கி காண்பிக்க கை பேண்ட் அணிந்த விரல்கள் மட்டுமே போதும். லேப்டாப் மற்றும் கணிப்பொறியில் வேலை பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் உறுதுணையாய் இருக்கும். சைகையில் கேம் விளையாடுவது ஒரு புது அனுபவமாக இருக்கும். கம்ப்யூட்டர் மவுஸ் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ‘கை’ செய்யும். அதே போல ஸ்மார்ட் டி.வி. களில் ரிமோட் போலவும் இது செயல்படும்.

அதாவது இந்த கை பேண்டின் உதவியுடன் நீங்கள் சைகையால் சவுண்ட் குறைப்பது, கூட்டுவது, சேனல் மாற்றுவது போன்றவற்றை நிகழ்த்தலாம். ஒரு முறை இந்த பேண்டை சார்ஜ் செய்து கொண்டால் 8 மணி நேரம் உழைக்கும். புளூடூத் தொழில்நுட்பத்தை கொண்டு இது மற்ற கருவிகளுடன் தொடர்பு கொள்கிறது.

Next Story