குலசேகரம் பகுதியில் மழை: மரம் விழுந்து போலீஸ் நிலையத்தின் காம்பவுண்டு சுவர் சேதம்
குலசேகரம் பகுதியில் பெய்த மழையால், மரம் சாய்ந்து விழுந்து போலீஸ் நிலையத்தின் காம்பவுண்டு சுவர் சேதம் அடைந்தது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக உள்ளது.
நேற்று முன்தினம் இரவு குலசேகரம் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. அப்போது, குலசேகரம் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்ததில் போலீஸ் நிலைய காம்பவுண்டு சுவர் இடிந்து சேதமடைந்தது.
மேலும் அந்த மரத்தின் கிளைகள் சாலையில் விழுந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து, மரத்தின் கிளையை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Related Tags :
Next Story